Otteri Selvakumar Tamil poems - ஓட்டேரி செல்வகுமார் (classic book list txt) 📗
- Author: ஓட்டேரி செல்வகுமார்
Book online «Otteri Selvakumar Tamil poems - ஓட்டேரி செல்வகுமார் (classic book list txt) 📗». Author ஓட்டேரி செல்வகுமார்
பட்ட பகலில்
அந்த காடு வெட்டி சாலையில்
அரிவாளால் வெட்ட பட்டு
பல உடல்கள்
சின்னா பின்னமாய் சிதறி
கிடக்க ...
அங்கு யாரும்
நின்று கதறி அழவில்லை...
ஒன்று இரண்டு காகங்கள்
மட்டும் ...
அந்த பிணங்களுக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்திக்கொண்டு இருந்தது
அந்த காக்கைகளுக்கு...
தெரிந்த உயிர் தருமம் கூட...
மனித ஜென்மங்களுக்கு...
புரியவில்லை ...
காரணம் ...
இங்கு பிணமாகி இருப்பது
மனிதர்கள் அல்ல...
இரண்டு வேப்ப மரம்
ஒரு அரச மரம்
ஒரு மாமரம்
ஒரு தூங்குமுஞ்சி மரம்
என ஐந்து மரங்கள்
பூமிக்கு பாரம் இல்லாமல்
நிழல்களை தொலைத்து...
உயிர் விட்டது
கொடுர அரிவாளால்
படு கொலை செய்யப்பட்ட
அந்த மரங்கள் ...
அட இது கொலை இல்லை
சொல்றீங்களா ?
பின் வேறு என்ன ?
மரமும்
சுவாசிக்கும் ஒரு உயிர் தானே ?
ஏன் புரியலை சனங்களுக்கு....
தமிழ் தமிழனின்
ஒரு அடையாளமா?
யார் சொன்னது ?
தமிழா ...
நீயும் நானும்
எழுதுவது தமிழாக
இருக்கலாம்...
அதற்காக ...
தமிழ் நமது
"அடியாளமாகி" விடாது
காரணம்
நாம் தமிழ் பேசுகிறோம் ...
நாம் தமிழ் எழுதுகிறோம்...
சில விசயங்களில் ...
ஆனால்:
படிப்பது ஆங்கிலத்தில் ...
பட்டம் வாங்குவது ஆங்கிலத்தில்
வேலை செய்வது ஆங்கிலதில்
பின் எப்படி ?
தமிழ் நமது "அடியாளம் "
என்று ...
உண்மைக்கு மாறாக பேசுகிறோம் ?
நம் தமிழ் மீது உள்ள
காதலால் சொல்கிறோம் ...
ஒரு மொழியை
நாம் காதல் செய்யலாம்
ஆனால் ...
அது உங்கள் வாழ்வுக்கு
நாமம் போட்டால்
சோறு போடும்
மொழி நோக்கி போகிறோம்
உயிர் வாழ ...
தமிழ் உங்களுக்கு
கண்டிப்பாக சோறு போடாது
நீங்கள் வேண்டுமானால்
தமிழுக்கு பிச்சை போடலாம்
தமிழில் எழுதி
தமிழில் பேசி
தமிழில் ....
உண்டு கொழித்து
தமிழை தங்கள்
உயிர் என சொல்லி
நாளும் "தமிளை" கொல்லும்
கேடு கெட்ட தமிழர்கள்
நாட்டில் இருக்கும் வரை
தமிழ் நமது அடயாளம்
என சொல்லாததிர்கள் ....
அது மிக அசிங்கம் ...
தமிழ் நமது அவமானம்
இன்று....
தமிழும் வளரவில்லை
தமிழ் மக்களும் வளரவில்லை
எஞ்சியது ...
அவமானம்தான்
தமிழ் மக்கள் படுகொலை தினமும்
சாதி ரீதியாய்...
மத ரீதியாய் ...
இன ரீதியாய் ....
தமிழன் நாளும் சாகிறான்
"தமில்" மட்டும் வாழந்து என்ன ?
வாழாவிட்டால் என்ன ?
"அப்படி" ஒரு
அவமானமாக ....
"இப்படி"
இன்னும் ஒரு அசிங்கமாக ...
தலையணை முத்தம்
உன்
நினைவுகளில்
நான்
என்னை தொலைதேன்
என் உறக்கம்
பறிபோனது
உனக்காக ....
என் கட்டில்
தலையணை
மட்டும் ...
நொந்து கொண்டது
என் முத்தங்களால் ...
இதுவும்
உனக்காக...
மட்டும் அல்ல
எனக்காகவும்தான்
பாவம் தலையணை
பகலிலும் தூங்கவில்லை
நம் காதளுக்காக ...
முடிவு எடு
குக்ஸ் சாலையில்
ஒரு பெரிய பேனர்
அன்பு மகள் மஞ்சனாவிக்கு
05 -07 -2013 அன்று மாலை மணி 06:15 க்கு
மஞ்சள் நீராட்டு விழா
சகுந்தலா திருமண மண்டபத்தில்
அனிவரும் வருக ...
இப்படிக்கு
அப்பா ராஜி
அம்மா புவனா
மற்றும் அண்ணன் தம்பிகள்
அட சே....
மஞ்சள் நீராட்டு விழா
என்பது ...
விட்டுக்குள் நடக்கவேண்டிய
சடங்கு...
அதற்கு போய் பேனரா ?
அருவெறுத்து கொண்ட ....
நான் ....
ஒரு பெண் வயசுக்கு
வருவது இயியல்பு....
அதற்கு போஸ்டர் பேனர்
தேவையா ?
படுபாவிகளா....
என்ன சொல்ல வரிங்க?
என்ன மகள்
உடல் உறவு கொள்ள தயார்
என்று ....ஊருக்கு
அறிவிப்பு செய்து அசிங்க படுதுரிங்களே
கொஞ்சமும் வெட்கம் இல்லை
உங்களுக்கு ....?
வெட்கமாவது மானமாவது
மானம் கெட்ட மட ஜனங்கலா ...
மஞ்சள் நீராட்டு விழா
முதலில் தேவையா ?
முடிவு எடுங்க....
இல்லனா தமிழ் பண்பாடு மேலும்
பஞ்சர் ஆய்டும்....
அப்ப புரியும்
என் சாதி உயர்ந்தது
என மார் தட்டும் மனிதா
நீயும்
நானும்
மனுஷ சாதி
என்பது புரிந்தும்
ஏன்...இந்த வேஷம் ?
ஒ...
நாளை எனக்கு பதில் நீ
"கக்குஸ்" கழுவ பொ..."
அப்ப புரியும்
உனக்கு எல்லாம் ...
ஒரு நாள்
நீ நானாக வேண்டும் ...
நான்
நீ யாக வேண்டும்
அப்ப தெரியும்
என் காதலின் வலி
உனக்கு ...
தெரிந்து என்ன ?
வா சும்மா
சொரிந்து கொள்வோம்
நமது இதயத்தை
காதலின்
பெயரில் ...
கொசு கடி
தமிழன் ஓட்டம்
அகதியாக
படுக்கை அறைக்குள்
அது
ஆண்களோடு
பெண்கள்
நட்பில்
உரிமையோடு
பழகலாமா?
ஒரு கேள்வி
என் தோழி
கேட்டாள்
எனிடம்
நான்
பதிலுக்கு ...
"நட்பு
கள்ள
காதலாகிவிடும்
என்கிற
அச்சம்
இன்று
நிறைய பேருக்கு
உண்டு.
அதனால்
தவிர்க்க
சொல்லுவார்கள்
வீட்டில்
உள்ள
பெருசுகள் ....
நல்ல
நண்பர்களாக
இருப்பின்
தப்பு.....
இல்லை.
உரிமையோடு
பேசுவது
மாத்ரி
தோளில்
கை
போடுவது
கிள்ளுவது
கிச்சு
கிச்சு
செய்வது
உடம்பை
தொட்டு
கொள்வது
மாத்ரி
செ(க்க்)ஸ்டைகள்
கூடாது ...
நட்பு
அப்புறம்
காலியாகிவிடும் ...
இல்லை
கள்ள
காதல்
ஆகிவிடும் ..."
என்று .. நான் சொல்ல
"அட ...விடுங்க
ஆண் பெண் நட்பில்
இது சகஜம்...
ஆமா இன்று
சகஜம் ..."
சொன்னாள்
தோழி
அட கேவலமே ...
அயல் பண்பாடு
எப்ப தமிழ் பண்பாடானது ?
என் மனசுக்குள்
கேட்டுகிட்டேன்
அது அவளவுதான்
சொல்ல முடியுமாம் ...
இங்கு ...
பள்ளி கூடதில் சேற்க
சாதி தேவை...
பள்ளி சான்று இதலில்
எழுத சாதி தேவை ...
வேலை வாய்ப்புக்கு
சாதி தேவை ...
கலியாணத்திற்கு
சாதி தேவை...
உறவுகளுடன் கை குலுக்க
சாதி தேவை ...
இங்கு ...
இன்று எல்லாவற்றுக்கும்
சாதி தேவை ...
சாதி இல்லாவிட்டால்
சமுகம் சுமுகமாய் இருப்பது
சுலபம் அல்ல...
சாதி ஒழிக கோசம்
வெறும் வெளி வேஷம் ...என்று
சாதிக்கு இனி கூஜா தூக்கு
நாளைய சந்ததிக்கு தூக்கு மாட்டு - தமிழா
நீ பிணமானாலும்....
வளமாய் வாழட்டும் உன் சாதி ...
மட பயலே ...
அசிங்கமா இல்ல உனக்கு ...
இன்று
அவளும்
நானும்
காதலித்த போது
எடுத்து கொண்ட
புகை படங்கள்
பார்க்கு போதெல்லாம்
மனசுக்குள்
வலி வரும்
அதுதான் என் காதல்
இன்று.. ..
????
+என் தாத்தா பூமியை
தோண்டிய போது
அவருக்கு நிறைய
கரும்கல் கிடைத்ததாம்
+என் அப்பா பூமியை
தோண்டிய போது
அவருக்கு நிறைய
மணல் கிடைத்ததாம்
+நான் பூமியை
தோண்டிய போது
எனக்கு நிறைய
எலும்பு துண்டுகள் கிடைத்தது
+என் மகன் பூமியை
தோண்டும்போது அவனுக்கு
நிறைய உயீர் உள்ள பிணங்கள்
மட்டும் தாராளமாய் கிடைக்கும்....
அடாடா
ஆங்கில புது வருட
வாழ்த்து அஞ்சலில்
வந்தது நண்பன் கிறுக்கன்
மிடம் இருந்து எனக்கு ...
பிரித்து பார்தால்
நாம ஊர் நமீதா சிரித்தாள்
"சே... அச்ங்கம்..."
என அலுத்து கொண்டு
தூக்கி விசி எரிந்தேன்
குப்பையில் ...
இருபினும் நமீதா
மனச்சுகுள் ஆடை இல்லா
தொடைக்குள் அழகாய்
ஒட்டிக்கொண்டு
இம்சித்தால்
அன்று மட்டும் அல்ல
இன்றும் ...
மனசு குப்பை ஆச்சு
ஆனால் என்ன ?
கண்கள் குளுந்து போச்சி
தற்காலிகமாக ...
ஆனால்
கஸ்மாலமாக
நன்றி நண்பன் கிருகனின்
புது வருட வாழ்த்துகளுக்கு ...
சொல்ல மட்டும் தோணவில்லை
நான் நமிதாவின்
கிறுகனாகி விட்டதால் ....
அட கச்மாளமே.......
Comments (0)