Tamil Haiku - otteri Selvakumar (dark academia books to read TXT) 📗
- Author: otteri Selvakumar
Book online «Tamil Haiku - otteri Selvakumar (dark academia books to read TXT) 📗». Author otteri Selvakumar
என் காதலில் நீ இல்லை
உன் காதலில் நான் இல்லை
ஆனாலும் தொடர்கிறது நம் காதல்
35கோபம் வருகிறது
புத்தனை கூப்பிடுங்கள்
என்னை அடிக்க
36அந்த சிரிப்பில் வாழ்கிறது
காதல் கொஞ்சம் சிரி
பூக்கள்
போதி மரத்தடியில்
காணவில்லை
புத்தனை இன்று
38அழுகிறது பொம்மை
மீண்டும் அடிக்கிறது
சிரிக்கும் குழந்தை
39புத்தன் யார்
கேள்வி கேட்காதே
நீதான் அது
40வண்ணத்துப்பூச்சியின்
காதலில் முத்தங்களை
கற்பிக்கப்படுகிறது
41அந்தத் துப்பாக்கிக்குள்
தோட்டாக்கள் இல்லை
சுதந்திரம் கேட்கிறது
42சுதந்திர தினம்
கொஞ்சம் மிட்டாய்கள்
சிரிக்கும் குழந்தைகள்
43பழைய குளத்துக்குள்
எம்பி குதித்து சண்டை போடுகிறது
பச்சை தவளை
44என் தேசத்தில்
நிர்வாணம் கூட
பக்தி தான்
45வானத்துக்குக் கீழே
சத்தமிடுகிறது எங்கள் ஊர்
காலி குடங்கள்
46அவள் திறந்த முத்தம்
ஹைக்கூ எழுதுகிறது
என் இதயத்தில்
நிர்வாணம் மட்டுமே
இங்கு நிஜமாய் போனதால்
காமம் கடவுள்தான்
48பூட்டிய கோவிலுக்குள்
கடவுளை திருடிவிட்டார்கள்
இன்று காலை
49
Comments (0)